ADDED : ஆக 27, 2026 10:20 PM

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலையில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா மற்றும் விக்சித் பாரத் யுவ சக்தி நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி ஸ்வயம் சேவக சங்கம் மற்றும் மகிளா சமன்வயா சார்பில், வந்தே மாதரம், 150 வது ஆண்டு மற்றும் விக்சித் பாரத் யுவ சக்தி (2047) நிகழ்ச்சி, கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்று தேசபக்தியை வெளிப்படுத்தும் வகையில் வந்தே மாதரம் பாடலை ஒருமித்த குரலில் பாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், முன்னாள் சபாநாயகர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவகசங்கம் மற்றும் மகிளா சமன்வயா நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
