புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
UPDATED : ஆக 27, 2026 09:07 PM
ADDED : ஆக 27, 2026 09:03 PM
புதுச்சேரி: கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் நடந்த விவாதம்
எதிர்க்கட்சி தலைவர் நாஜிம்: புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடத்தினாலும், அதற்கான உரிய நிதி கிடைக்குமா என்று தெரியவில்லை. ஏனெனில் நிதி கமிஷனில் புதுச்சேரி சேர்க்கப்படவில்லை.
அப்புறம் எப்படி நிதி கிடைக்கும். எனவே முதலில் புதுச்சேரிக்கான நிதியை பெறுங்கள். அதன் பிறகு உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
சபாநாயகர் அன்பழகன்: உள்ளாட்சி தேர்தலை நடத்த முதல்வர் ரங்கசாமி முயற்சித்தார். ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும், என சுப்ரீம் கோட்டிற்கு சென்று முட்டுகட்டை போட்டதே தி.மு.க., தான். ஆனால் தமிழகத்தில் இந்த ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்தப்பட்டது. அப்புறம் எதற்கு இந்த இரட்டை வேடம்?
எதிர்க்கட்சி தலைவர் நாஜிம்: புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்தை பெறுவதற்கு அதிக காலம் எடுக்கலாம். அதற்குள்ளாக அதிகாரத்தை பெற வழிகாண வேண்டும்.
இந்த விவாதத்திற்கு இறுதியில் பதிலளித்து முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
கடந்த 38 ஆண்டுக்கு பின் உள்ளாட்சி தேர்தலை முதலில் நான் தான் நடத்தினேன். ஆனால் எதிர்பார்த்தபடி உள்ளாட்சி நிதி வரவில்லை. சுப்ரீம்கோர்ட்டில் தேர்தல் வழக்கு உள்ளது. தீர்ப்பின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தல் புதுச்சேரியில் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
