/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சங்கரதாஸ் சுவாமிகளின் 158வது பிறந்த நாள் விழா
/
சங்கரதாஸ் சுவாமிகளின் 158வது பிறந்த நாள் விழா
ADDED : செப் 07, 2025 11:07 PM

புதுச்சேரி: புதுச்சேரி ராதே அறக்கட்டளை சார்பில், நாடகத் தந்தை சங்கரதாசு சுவாமிகளின் 158வது பிறந்தநாள் விழா நேற்று அவரது நினைவிடத்தில் நடந்தது.
விழாவிற்கு தமிழ்மாமணி வேல்முருகன் தலைமை தாங்கினார். புதுவை தமிழ் நெஞ்சன், நுாலகர் அரசேந்தரன், இளங்கோ முன்னிலை வகித்தனர். கோவிந்தராசு வரவேற்றார்.
வைத்தியநாதன் எம்.எல்.ஏ., அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, சங்கரதாஸ் சுவாமிகளின் பிறந்த நாளை அரசு விழாவாக நடத்த அரசிடம் கோரிக்கை வைத்து, அதனை நடைமுறைபடுத்த ஆவண செய்வதாக தெரிவித்தார்.
ராதே அறக்கட்டளை நிறுவுனர் ராதே சங்கரதாசரின் நாடகக் கலை குறித்து சிறப்புரை வழங்கினார். படைப்பாளி பைரவி தலைமையில் பாரதி, புகழேந்தி, சரசுவதி வைத்தியநாதன், மதன், விசாலாட்சி, இளமுருகன், விஜயலட்சுமி, பிரமிளாமேரி, சத்தியமூர்த்தி, இளங்கோ, எலிசபத் ராணி ஆகியோர் கவிதை வாசித்தனர்.
லெனின் பாரதி, ஞானமூர்த்தி, அருண்மொழிச்சோழன், கோவலன் உள்ளிட்ட கலைஞர்கள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தினர். அய்யப்பன் நன்றி கூறினார்.