/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புத்தாண்டு கொண்டாட்டம்: சாலை விபத்துகளில் 17 பேர் காயம்
/
புத்தாண்டு கொண்டாட்டம்: சாலை விபத்துகளில் 17 பேர் காயம்
புத்தாண்டு கொண்டாட்டம்: சாலை விபத்துகளில் 17 பேர் காயம்
புத்தாண்டு கொண்டாட்டம்: சாலை விபத்துகளில் 17 பேர் காயம்
ADDED : ஜன 02, 2026 04:49 AM
புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தில் நடந்த பல்வேறு சாலை விபத்தகளில் 17 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றனர்.
ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஏராளமான இளைஞர்கள் நேற்று முன்தினம் புதுச்சேரியில் குவிந்தனர். வெளி மாநில இளைஞர்கள் வாடகை பைக்குகளில் புதுச்சேரியில் சுற்றித் திரிந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6:00 மணி முதல் நேற்று காலை 6:00 மணி வரை பல்வேறு இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் 17 பேர் காயமடைந்து, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று திரும்பினர்.
மேலும் 50க்கும் மேற்பட்டோர், சிறு விபத்து காரணமாக தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று சென்றனர்.