நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: வீட்டு எதிரில் நிறுத்தியிருந்த பைக் திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார், கோபாலன் கடை, மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சதாசிவம், 54; நகராட்சி ஊழியர். இவர் உறவினருக்கு சொந்தமான பைக்கை (பி.ஒய்.01.பி.எப்.4090) கடந்த 28ம் தேதி இரவு வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றார். பின் திரும்பி வந்து பார்த்தபோது பைக் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

