தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போக்குவரத்து விதிமீறல் 17,672 பேருக்கு அபராதம்

போக்குவரத்து விதிமீறல் 17,672 பேருக்கு அபராதம்

போக்குவரத்து விதிமீறல் 17,672 பேருக்கு அபராதம்


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கடந்த மாதம் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்ட 17,672 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், விபத்துகளைக் குறைக்கவும் போக்குவரத்துக் காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த செப்டம்பர் மாதத்தில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 17,672 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சீனியர் எஸ்.பி., திவ்யா செய்திக்குறிப்பு:

சிறப்பு தணிக்கையில் பல்வேறு வகையான விதிமீறல்கள் கண்டறியப்பட்டன. இதில், தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய 5,594 பேர் மீதும், எதிர்திசையில் வாகனம் ஓட்டிய 2,534 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாகனம் ஓட்டும்போது மொபைல் பயன்படுத்திய 2,216 பேர், போக்குவரத்து சிக்னலை மீறிய 1,700, சீட் பெல்ட் அணியாமல் சென்ற 1,012 பேர் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய 277 பேர், மதுபோதையில் வாகனம் ஓட்டிய 186 பேர், சிறார்கள் வாகனம் ஓட்டிய 179 சம்பவங்கள், ஏர் ஹாரன் பயன்படுத்திய 59 நபர்கள், அதிக சுமை ஏற்றிச் சென்ற 13 வாகன ஓட்டுநர்கள் மற்றும் இதர 3,902 போக்குவரத்து விதிமீறல்கள் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோர் ஒருவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரக் கட்டுப்பாடுகளை மீறி நகருக்குள் இயக்கப்பட்ட கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது 6 முதல் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றி, பாதுகாப்பான பயண சூழலை உருவாக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us