/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
18 கோடி பேருக்கு மூட்டு நோய்; டாக்டர் வினோத்குமார் தகவல்
/
18 கோடி பேருக்கு மூட்டு நோய்; டாக்டர் வினோத்குமார் தகவல்
18 கோடி பேருக்கு மூட்டு நோய்; டாக்டர் வினோத்குமார் தகவல்
18 கோடி பேருக்கு மூட்டு நோய்; டாக்டர் வினோத்குமார் தகவல்
ADDED : டிச 28, 2024 06:07 AM

புதுச்சேரி; இந்தியவில் மூட்டு நோயாளிகளின் எண்ணிக்கை 18 கோடி என, டாக்டர் வினோத்குமார் தெரிவித்தார்.
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த மருத்துவக் கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார். சென்னை பார்வதி மருத்துவமனையின் முட நீக்கியல் பிரிவு டாக்டர் வினோத் குமார் பேசுகையில், 'மூட்டு தேய்மானம் என்பது நான்கு வகையானது. இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூட்டில் உள்ள குருத்தெலும்பு, ஜவ்வு ஆகியவை தேய்மானம் காரணமாக நாளடைவில் வலிகள் ஏற்படும்.
முடக்குவாதம் உள்ளவர்களுக்கு இளம் வயதிலேயே மூட்டில் வீக்கம் ஏற்பட்டு, வலி வரும். சிலருக்கு உடல் பருமன் மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக ஆரம்ப கட்டத்தில் வரும் மூட்டு வலிகளுக்கு சரியான உடல் எடை, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சரி செய்யமுடியும். முற்றிலும் மூட்டுகள் சேதமடைந்தவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை தான் தீர்வு.
இந்தியாவில் 18 கோடி பேருக்கு மூட்டு நோய் பிரச்னைகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைத்தொடர்ந்து பேசிய டாக்டர் தர்மராஜன், தட்டையான பாதம் உள்ளவர்களுக்கு ஏற்படும் ஜவ்வு தேய்மானம், குதிக்கால் எலும்பில் வலிகள் ஏற்படும்.
இதனை குழந்தை நடக்கும் பருவம் துவங்கி 12 வயதிற்குள் இருப்பவர்களுக்கு காலணி மற்றும் முறையான பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம். 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தசை நார் சீரமைப்பு மற்றும் எலும்பை வெட்டி சரியான பாத அமைப்பை உருவாக்கும் சிகிச்சை முறைகளும் உள்ளன, என அவர் கூறினார்.
கருத்தரங்கில் உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஷமிமுனிஸா பேகம், மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறைதீர் அதிகாரி ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

