/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு 1,876 பேர் பங்கேற்பு
/
பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு 1,876 பேர் பங்கேற்பு
பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு 1,876 பேர் பங்கேற்பு
பி.எஸ்சி., நர்சிங் நுழைவு தேர்வு 1,876 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 30, 2025 03:51 AM

புதுச்சேரி : பி.எஸ்சி., நர்சிங் படிப்புக்கு 9 மையங்களில் நடந்த நுழைவுத் தேர்வில், 1,876 பேர் பங்கேற்றனர்.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் செவிலியர் கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி., நர்சிங் படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவதற்கு, சுகாதாரத்துறை சார்பில் நுழைவு தேர்வு நடத்தப்பட்டது. புதுச்சேரி பெத்திசெமினார் மேல்நிலைப்பள்ளி, இ.சி.ஆர்., சங்கரா வித்யாலயா பள்ளி மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய 9 மையங்களில் நேற்று தேர்வு நடந்தது.
நுழைவு தேர்வை எழுதுவதற்கு, சென்டாக் இணையதளத்தில், புதுச்சேரியில், 1,612 பேரும், காரைக்காலில் 464, மாகியில் 82, ஏனாமில் 54 என, மொத்தம் 2 ஆயிரத்து 212 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த தேர்வில், 1,876 பேர் பங்கேற்றனர். 336 பேர் 'ஆப்சென்ட்'.
தேர்வு மையங்களை சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முன்னதாக, காலை 8:30 மணி முதல் 9:45 மணி வரை தேர்வர்கள் சோதனை செய்யப்பட்டு, ஹால்டிக்கெட்டுகளை சரிபார்த்து அனுமதித்தனர்.
மொபைல் போன் உட்பட மின்னணு சாதனங்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. 9:45 மணிக்கு பின் வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. கால தாமதமாக வந்த சிலர் திரும்பி சென்றனர்.
நுழைவு தேர்வுக்கான ஆன்சர் கீ, நாளை 1ம் தேதி வெளியிடப்படும்.
பாக்ஸ்.,
மாணவிக்கு உதவிய
பெண் போலீஸ்
மாணவி ஒருவர், தேர்வு எழுதும் மையத்தை சரியாக பார்க்காமல், வேறொரு மையத்திற்கு தவறுதலாக வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசார், வனிதா, அந்த மாணவியை உடனடியாக தனது மொபைட்டில் அழைத்து சென்று, உரிய தேர்வு மையத்தில் விட்டார்.