/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் 19.4 செ.மீ., மழை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
/
காரைக்காலில் 19.4 செ.மீ., மழை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
காரைக்காலில் 19.4 செ.மீ., மழை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
காரைக்காலில் 19.4 செ.மீ., மழை நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
ADDED : டிச 01, 2025 06:27 AM

காரைக்கால்: காரைக்காலில் தொடர் கனமழையால் 5 ஆயிரம் எக்டர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
டிட்வா புயல் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகி றது. நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 மணி வரை 19.4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. மேலும், பல்வேறு சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
தொடர் மழையால், கடற்கரை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. சூரைகாற்று கா ரணமாக கடற்கரையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும், கடற்கரையை சுற்றியுள்ள சிறுவர் பூங்கா, கண்காணிப்பு கோபுரம், சீகல்ஸ் உணவகம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மழை நீர் தேங்கியது.
தொடர் கனமழை காரணமாக, நெடுங்காடு, திருநள்ளார், கோட்டுச்சேரி, திருப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடியில் பயிரிடப்பட்ட சுமார் 5 ஆயிரம் எக்டர் பரப்பிலான நெற்பயிர்கள் முழுதும் மழைநீரில் முழுகின. இதனால் நெற்பயிர்கள் தண்ணீரில் அழுகி வீணாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் விவசாய நிலத்தில் தேங்கியு ள்ள மழைநீரை உடனடியாக வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

