/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழையால் பாதித்த திடீர் நகரில் எம்.எல்.ஏ., கலெக்டர் ஆய்வு
/
மழையால் பாதித்த திடீர் நகரில் எம்.எல்.ஏ., கலெக்டர் ஆய்வு
மழையால் பாதித்த திடீர் நகரில் எம்.எல்.ஏ., கலெக்டர் ஆய்வு
மழையால் பாதித்த திடீர் நகரில் எம்.எல்.ஏ., கலெக்டர் ஆய்வு
ADDED : டிச 01, 2025 06:27 AM

புதுச்சேரி: மழையால் பாதிக்கப்பட்ட திடீர் நகர் பகுதியை எம்.எல்.ஏ., நேரு மற்றும் கலெக்டர் குலோத்துங்கன் பார்வையிட்டு, குறைகளை கேட்டறிந்தனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால் உருளையன்பேட்டை தொகுதி உப்பனாறு வாய்க்கால் ஒட்டி உள்ள திடீர் நகர் பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு, சுகாதாரமற்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
இதையடுத்து, மழையால் பாதிக்கப்பட்ட திடீர் நகர் பகுதியை நேரு எம்.எல்.ஏ., கலெக்டர் குலோத்துங்கன் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது, மக்கள் தங்களுக்கு மாற்று இடமாக அரசு குடிசை மாற்று வாரியம் மூலம் லாம்பட் சரவணன் நகரில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் உறுதியளித்தார்.
தாசில்தார் பிரீத்திவி, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.