/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நவோதயா வித்யாலயாவில் 6ம் வகுப்பில் சேர இன்று தேர்வு 80 இடங்களுக்கு 1,954 பேர் தேர்வு எழுதுகின்றனர்

ADDED : ஜன 18, 2025 07:18 AM
புதுச்சேரி : காலாப்பட்டு நவோதயா வித்யாலயா பள்ளியில் இந்தாண்டு ஆறாம் வகுப்பில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு சீட்டிற்கு 24 பேர் போட்டி களத்தில் உள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள நவோதயா வித்யாலயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பு சேருவதற்கான தெரிவு நிலை தேர்வு இன்று காலை 11:00 மணி முதல், 1:30 மணி வரை நடக்க உள்ளது. புதுச்சேரி பெரிய காலாப்பட்டில் உள்ள நவோதயா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் 80 இடங்கள் உள்ளன.
இந்த இடத்தில் சேர இந்தாண்டு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மொத்தமுள்ள 80 சீட்டிற்கு 1,954 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு சீட்டிற்கு 24 பேர் வீதம் போட்டி களத்தில் உள்ளனர்.
நவோதயா பள்ளிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளதற்கு, இங்கு வழங்கப்படும் தரமான கல்வி தான் காரணம். மாநில அரசுகளை போன்று 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உணவு, விடுதி வசதி, சீருடை, புத்தகங்கள் என அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
நவோதயா பள்ளி சிறப்புகள் குறித்து கல்வியாளர்கள் கூறும்போது, 'ஆறாம் வகுப்பில் சேர வேண்டுமானால், 5ம் வகுப்பு வரை எந்த பயிற்றுமொழியில் படித்தார்களோ, அந்த மொழியிலேயே நுழைவுத்தேர்வு எழுதலாம்.
நவோதயா பள்ளிகள் அனைத்திலும் ஆங்கிலம் தான் பயிற்றுமொழி. 2வது மொழிப் பாடமாக அந்தந்த மாநில மொழிகள் இருக்கும்.
புதுச்சேரியில் உள்ள நவோதயா பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக இருக்கிறது. இங்கு ஹிந்தி என்பது விருப்பப் பாடமாக மட்டுமே உள்ளது. அதில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம்கூட இல்லை. எந்த பள்ளியிலும் சமஸ்கிருதம் கிடையாது.
கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதால் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் சேர கடும் போட்டி ஏற்பட்டுள்ளது' என்றனர்.