தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற 2 பேர் கைது

 கஞ்சா விற்ற 2 பேர் கைது

 கஞ்சா விற்ற 2 பேர் கைது


ADDED : ஜூலை 02, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கஞ்சா விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊசுடு தனியார் மருத்துவமனை மற்றும் கல்லுாரி அருகே மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சிலர் கஞ்சா விற்பதாக வில்லியனுார் போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் புனிதராஜ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபர்களை பிடித்து விசாரித்தனர்.

அதில், அம்மணங்குப்பம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செந்தில்குமார் மகன் செல்வகுமார், 25; ராதாபுரம், வாட்டார் டேங்க் தெருவை சேர்ந்த ராஜி மகன் மோகன்ராஜ், 23, ஆகியோர் என்பது தெரியவந்தது.அவர்களிடம் சோதனை செய்ததில், 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, செல்வகுமார், மோகன்ராஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்கள், 1 மொபைல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டுசிறையில் நேற்று அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us