/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வட்டிக்கடையில் திருடிய 2 பேர் கைது
/
வட்டிக்கடையில் திருடிய 2 பேர் கைது
ADDED : பிப் 21, 2026 05:11 AM
புதுச்சேரி: சோலை நகர், வட்டிக்கடையில் கம்மல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, கேண்டின் வீதியை சேர்ந்தவர் அபிேஷக்குமார், 33; வட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 18 ம் தேதி கடைக்கு வந்த சோலை நகரை சேர்ந்த சபரி, பாரதி ஆகியோர், குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்தனர்.
அதற்கு, அபிேஷக்குமார் பணம் இல்லை என, கூறியபடி கடையில் இருந்து வெளியே சென்றார். மீண்டும் கடைக்கு வந்தபோது, இருவரும் இல்லை. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் இருந்த 3 கிராம் தங்க கம்மல் திருடு போய் இருந்தது.
அபிேஷக்குமார் புகாரின் பேரில், முத்தியால்பேட்டை போலீசார் சபரி, 43; பாரதி, 38; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து நேற்று கைது செய்தனர். பின், கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

