/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது
/
கொலை முயற்சி வழக்கில் 2 பேர் கைது
ADDED : ஏப் 04, 2025 04:13 AM
பாகூர்: கிருமாம்பாக்கத்தில் கார் டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் 25; கார் டிரைவர்.நேற்று முன்தினம் காலை வீட்டில் துாங்கிகொண்டிருந்த போது மர்ம நபர்கள், உள்ளே புகுந்து அவரை அறிவாளால், வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். அப்போது தடுக்க முயன்ற அவரது தாய் இந்துமதிக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. இதில், படுகாயமடைந்த இருவரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் கொலை முயற்சி பிரிவின்கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், அதே பகுதியை சேர்ந்த ரவுடியானபுகழ், 35;தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, முன் விரோதம் காரணமாக ஜார்ஜ் பெர்னாண்டசை வெட்டி கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.இதையடுத்து, புகழ் 35; சிவபாலன், 25; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர்.

