ADDED : அக் 24, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே மரம் விழுந்து கூரை வீடுகள் சேதானது.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ள நிலையில், பாகூர் பகுதியில் அவ்வப்போது மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று (அக்.,23) கிருமாம்பாக்கம் அடுத்த ஈச்சங்காடு கிராமத்தில் இருந்த ஆலமரமும், பனை மரமும் மழையின் காரணமாக சாய்ந்தன.
இரண்டு மரங்களும் அங்கிருந்த சசிகுமார் மனைவி ஆனந்தலட்சுமி 45; உத்திராடம் மனைவி கிருஷ்ணவேணி 60; ஆகியோரது கூரை வீட்டின் மீது விழுந்ததால், வீடுகள் சேதமானது. தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.
