மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 32 மனுக்களுக்கு உடனடி தீர்வு
மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 32 மனுக்களுக்கு உடனடி தீர்வு
ADDED : அக் 24, 2026 06:08 PM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் ஸ்டேஷன்களில் நடந்த மக்கள் மன்றம் நிகழ்ச்சியில் 32 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
மங்களம் போலீஸ் ஸ்டேஷனில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் தலைமையில் இன்று (அக்.,24) மக்கள் மன்றம் நிகழ்ச்சி நடந்தது. அதே போல், புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களில் எஸ்.பி.,க்கள், திவ்யா, பக்தவச்சலம் ஆகியோர், பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மேட்டுப்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., வம்சிதரரெட்டி, தவளக்குப்பத்தில் எஸ்.பி., கோதண்டராமன், காரைக்கால் நெடுங்காடு போலீஸ் ஸ்டேஷனில், எஸ்.பி., பழனிவேல், ஏனாம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., வரதராஜன், மாகியில், எஸ்.பி., தனசேகரன் ஆகியோர் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுத்தனர்.
மொத்தம் 62 புகார் மனுக்கள் பெறப்பட்டது. அதில், 32 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
