ADDED : அக் 25, 2026 02:28 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில் பவுர்ணமி பூஜை இன்று (25ம் தேதி) நடக்கிறது.
புதுச்சேரி – திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஐப்பசி மாத பவுர்ணமி பூஜை இன்று (25ம் தேதி) நடக்கிறது.
இதையொட்டி, பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு காலை சிறப்பு அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு நவாவரண பூஜை, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேர் உள்புறப்பாடு நடக்கிறது.
