ADDED : அக் 24, 2026 05:38 PM
4 பேர் மீது வழக்கு: புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த வாதானுார், குட்டைத் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் மகன் சத்யபானு, 21. இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பச்சையம்மாள் என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது.
நேற்று (அக்.,23) மீண்டும் இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு, தாக்கி கொண்டனர். சத்யபானு புகாரின் பேரில், பச்சையம்மாள் மீதும், பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார், அவரது மகள் சத்யபானு, உறவினர் உஷா ஆகியோர் மீதும் திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
லாரி மோதி விவசாயி பலி: புதுச்சேரி; கேரள மாநிலம், கண்ணுார் மாவட்டம், தலச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 59; விவசாயி. இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் (கே.எல். 58 யு 3095) மாகே பைபாசில் சென்று கொண்டிருந்தார். அவரை பின் தொடர்ந்து வந்த ஈச்சர் லாரி (கே.எல் 56 டயுள்யூ 5159) ஸ்கூட்டர் மீது மோதியது.
நிலைதடுமாறி கீழே விழுந்த மனோஜ்குமார் மீது லாரி பின் சக்கரம் ஏறி இறங்கியதில், படுகாயமடைந்த மனோஜ்குமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
விபத்து குறித்து பள்ளூர் போலீசார் வழக்குப் பதிந்து, லாரி டிரைவர் மலப்புரம் மாவட்டம், முத்துவிட்டி, முண்டுபரம்பா பகுதியை சேர்ந்த விஷ்ணு என்பவரை தேடி வருகின்றனர்.
ரகளையில் ஈடுபட்ட 10 பேர் கைது
புதுச்சேரி; அய்யங்குட்டிப்பாளையம், ஐயனார் கோவில் அருகே குடிபோதையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய குருமாம்பேட்டைச் சேர்ந்த பெருமாள்ராஜ், 36; என்பவரை மேட்டுப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
ரெட்டியார்பாளையம், கனகன் ஏரி அருகே குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பிள்ளைதோட்டம் பகுதியை சேர்ந்த நிர்மால், 28; என்பவரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
குமாரப்பாளையம், ஜான்குமார் நகர் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வானுார் ரஞ்சித், 38: என்பவரை காட்டேரிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார்: கூடப்பாக்கம் சாலை தனியார் பார் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வில்லியனுார் சதீஷ், 29; வில்லியனுார் பை பாஸ் தனியார் ஒயின்ஷாப் அருகே போதையில் ரகளையில் ஈடுபட்ட வில்லியனுார் பாலகிருஷ்ணன், 32; ஆகியோரை வில்லியனுார் போலீசார் கைது செய்தனர்.
உறுவையாறு, தனியார் ஒயின்ஷாப் அருகே போதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கடலுார், புதுபாளையசக ரவி, 50; என்பவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
முதலியார்பேட்டை, தனியார் ஒயின்ஷாப் அருகே குடிபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வேல்ராம்பட்டு தண்டபாணி, 50; அரியாங்குப்பம் ஜெகநாதன், 29; தேங்காய்திட்டு கார்த்திகேயன், 39; வாணரப்பேட்டை ஹாசன், 33, ஆகியோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
