/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 2 மருந்துகளுக்கு தடை
/
புதுச்சேரியில் 2 மருந்துகளுக்கு தடை
ADDED : பிப் 18, 2026 04:28 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் மேலும் 2 மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஆனந்த கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மாநிலத்தில் போலி மருந்து சம்பவத்தை தொடர்ந்து, மருந்து தரக்கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து மருந்து உற்பத்தியாளர்களும் தங்களது நிறுவனத்தில் காலாவதியான மருந்து மூலப்பொருட்கள், துணை பொருட்கள் மற்றும் காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும். மருந்து உற்பத்தி மட்டுமின்றி 3ம் தரப்பினரிடமிருந்து பெறப்பட்டவை குறித்த விவரங்களை 3 மாதங்களுக்கு ஒருமுறை மருந்து கட்டுப்பாட்டுத்துறை அலுவலகத்துக்கு ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
இதேபோல், இமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள பிரைமஸ் மருந்து நிறுவனம் தயாரிக்கும் பிரிம்கிளவ் ஊசி மருந்து, சோலன் மாவட்டத்தில் உள்ள பின்னாகிள் லைப் சயின்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பாராசிடமால் மாத்திரை (அசிடமோல் 500) போதிய தரம் இல்லாததால், விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

