ADDED : செப் 26, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: நெல்லித்தோப்பு, கஸ்துாரிபாய் நகரை சேர்ந்தவர் ஆனந்து, 47; ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று காலை ஆனந்து வீட்டின் அருகே அடையாளம் தெரியாத 2 பேர், மூதாட்டியிடம் தகராறு செய்தனர்.
அதனை ஆனந்து, தட்டிக்கேட்டார். ஆத்திரமடைந்த இருவரும் திட்டி, ஆனந்தை சரமாரியாக தாக்கினர். அக்கம், பக்கத்தினர் அவர்களை மடக்கி பிடித்து, உருளையான்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், அவர்கள் பெரியார் நகரை சேர்ந்த அசோக், 30, நிர்மல்குமார் 25, என்பது தெரியவந்தது. ஆனந்து புகாரின் பேரில், இருவர் மீதும் உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வரகின்றனர்.
