ADDED : செப் 26, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ரகளை செய்த 5 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
நெட்டப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது மொ.குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 27, என்பவர் மது போதையில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
இதோபோல் காலப்பட்டு பகுதியில் ரகளையில் ஈடுப்பட்ட மரக்காணம் காவஸ்கர், 30; ஒதியஞ்சாலை நவீன்குமார், 31; திருக்கனுார் ஸ்டிபன்ராஜ், 48; கோபிகிருஷ்ணன், 25; ஆகியோர் மீது அந்தந்த போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
