தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/2 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: அமைச்சர் ராஜவேலு தகவல்

2 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: அமைச்சர் ராஜவேலு தகவல்

2 புதிய சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: அமைச்சர் ராஜவேலு தகவல்


UPDATED : அக் 09, 2026 01:41 AM

ADDED : அக் 09, 2026 01:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 01:41 AM ADDED : அக் 09, 2026 01:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டில்லியில் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சர்கள் கூட்டத்தில் புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ராஜவேலு பங்கேற்று பேசினார்.

அவர் பேசுகையில், ‘புதுச்சேரியில் ஜிப்மர், என்.ஐ.டி., புதுச்சேரி பல்கலைக்கழகம், புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் 100-க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் உள்ள அடல் இன்குபேஷன் மையம் 60க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டி வளர்ச்சியளித்துள்ளது.

புதுச்சேரி முழுதும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ந்து வருகிறது. திருத்தப்பட்ட பாரத்நெட் திட்டத்தின் கீழ், கிராம பஞ்சாயத்துகள், கிராமப்புறப் பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும். புதுச்சேரியில் ஏ.ஐ.,மையம் அமைத்து வருகிறோம். இரண்டு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உருவாக்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் தொழில்கள் அமைக்கப்படும்போது, நாட்டின் பிற பகுதிகளில் கிடைக்கும் அதே வாய்ப்புகளை பெறும் வகையில், மத்திய அரசுத் திட்டங்கள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் தொழில்நுட்ப முயற்சிகளுடன் புதுச்சேரியை இணைக்க மத்திய அரசின் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us