ADDED : ஆக 08, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; காரில் வைத்து குட்கா பெருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் மதியம் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது ஒதியம்பட்டு அரசு பள்ளி அருகே காரில் குட்கா பொருட்களை வைத்து விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த ஞான பில்டன்குமார், 42; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து கார் மற்றும் 13 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். வில்லியனுார் மாதா கோவில் அருகில் குட்கா பொருட்களை விற்ற உறுவையாறு பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன், 47; என்பவரை கைது செய்தனர்.