ADDED : பிப் 19, 2026 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால், மீராப்பள்ளி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ஜெஹபர் ஷரீப். இவர், 25 ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த நான்கு மாதங்களாக தொடர்ச்சியாக ஆடுகள் காணாமல் போயின.
கடந்த 5ம் தேதி மேய்ச்சலுக்கு சென்ற அவரது ஒரு ஆட்டை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, இருவர் ஆட்டை திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின் பேரில், நகர போலீசார் வழக்குப் பதிந்து, ஆட்டை திருடிய இறைச்சிக் கடை உரிமையாளர் மீராப்பள்ளித்தோட்டத்தை சேர்ந்த அஜ்மல் அகமது, 45; அவரது நண்பர் யாசர் அராபத், 48, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

