தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மொபைல் போன் திருடிய 2 பேர் கைது 

மொபைல் போன் திருடிய 2 பேர் கைது 

மொபைல் போன் திருடிய 2 பேர் கைது 


ADDED : நவ 06, 2024 05:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 05:43 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருக்கனுார் : திருக்கனுார் அடுத்த சோம்பட்டு திருவண்ணாமலை மெயின் ரோட்டை சேர்ந்தவர் கலைச்செல்வன், தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி சவுமியா, 22. இவர் தனது ரூ.27 ஆயிரம் மதிப்பிலான மொபைல் போனை கடந்த 30 ம் தேதி வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு துாங்கியபோது, திடீரென மாயமானது.

இதுகுறித்து சவுமியா அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், திருக்கனுார் ஏரிக்கரையில் சந்தேகப்படும்படி சுற்றி திரிந்த 2 பேர், போலீசார் நேற்று பிடித்து விசாரணை நடத்தினர்.

அதில், செட்டிப்பட்டு புதுநகரை சேர்ந்த சக்திவேல், 18; பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குணசீலன், 21; என்பதும், சோம்பட்டில் வீட்டில் போனை, திருடி வேறு ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார் நேற்றிரவு கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், திருடிய மொபைல் வைத்துள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us