/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டிரெய்லர் மீது பைக் மோதல் சிறுவன் உட்பட 2 பேர் பலி
/
டிரெய்லர் மீது பைக் மோதல் சிறுவன் உட்பட 2 பேர் பலி
டிரெய்லர் மீது பைக் மோதல் சிறுவன் உட்பட 2 பேர் பலி
டிரெய்லர் மீது பைக் மோதல் சிறுவன் உட்பட 2 பேர் பலி
ADDED : ஜன 28, 2025 05:15 AM

திருக்கோவிலூர் : திருக்கோவிலுார் அருகே டிராக்டர் டிரெய்லர் மீது பைக் மோதிய விபத்தில் சிறுவன் உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார், மந்தகரை வீதியை சேர்ந்தவர் முருகன் மகன் மோகன்ராஜ்,17; பத்தாம் வகுப்பு படித்துள்ளார்.
இவர் நேற்று முன்தினம் இரவு 9:10 மணிக்கு தனது உறவினரின் யமாகா பைக்கை திருவெண்ணெய்நல்லுார் சாலையில் ஓட்டிச் சென்றார். பிளஸ் 2 படிக்கும் அவரது நண்பரான தெப்பக்குள தெரு சுரேஷ் மகன் ஹரிஷ்,18; உட்கார்ந்து சென்றார்.
மோகன்ராஜ் ஓட்டிச் சென்ற பைக் ஆவியூர் அருகே, முன்னால் சென்ற டிராக்டர் டிரெய்லர் மீது மோதியதில் பைக் துாக்கி வீசப்பட்டது. அதில், மோகன்ராஜ், ஹரிஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருக்கோவிலூர் போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.