/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது 146 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்
/
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது 146 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது 146 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது 146 கிலோ குட்கா, பான்மசாலா பறிமுதல்
ADDED : அக் 06, 2024 04:29 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்து 146 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
லாஸ்பேட்டை, பெத்துசெட்டிப்பேட், சுப்ரமணியர் கோவில் தெருவில் புகையிலை பொருட்கள் விற்பதாக, லாஸ்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சிறப்பு அதிரடிப்படை இன்ஸ்பெக் டர் கணேஷ், சப்இன்ஸ்பெக்டர்கள் அன்சர்பாஷா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
பெத்துசெட்டிபேட், சுப்ரமணியர் கோவில் வீதியில் சந்தேகத்திடமான இடத்தில் மூட்டை மூட்டையாக புகையிலை பொருட்களான ஹான்ஸ், விமல் பான் மசாலா, கூல் லீப், ஸ்சுவாகத் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
பெங்களூருவில் இருந்து பார்சல் மூலம் புகையிலை பொருட்களை புதுச்சேரிக்கு கொண்டு சிறிய கடைகளுக்கு சப்ளே செய்து வந்த சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ரெயின்போ நகர் முதல் குறுக்கு தெருவைச் சேர்ந்த முகேஷ்குமார், 53; சிகரெட் விற்பனை டீலர் பெத்துசெட்டிபேட் செந்தில்வேலன், 49, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 146 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இருவரையும் கைது செய்த போலீசாரை சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா பாராட்டினார்.
அவர், கூறுகையில், 'புதுச்சேரியில் இந்தாண்டு இதுவரை 133 புகையிலை பொருட்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு 250க்கும் மேற்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிந்ததற்காக சுகாதாரத்துறை செயலரிடம் பாராட்டு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது' என்றார்.