ADDED : அக் 18, 2026 12:41 AM
அ நிறம் | அளவு
பாகூர்: பாகூர் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் பகுதியில், ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுபட்ட கிளியனுார் அண்ணா நகரை சேர்ந்த நரேஷ், 36, என்பவரை கைது செய்தனர்.
அதேபோல், கரையாம்புத்துார் போலீசார் ரோந்து சென்றபோது, மணமேடு மேம்பாலம் அருகே ரகளையில் ஈடுபட்ட பெரியசோழவல்லி கிராமத்தை சேர்ந்த குமார், 60, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
