தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி வில்லியனுார் அருகே சோகம்

 ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி வில்லியனுார் அருகே சோகம்

 ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பலி வில்லியனுார் அருகே சோகம்


ADDED : ஜூன் 05, 2026 04:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 04:32 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: வில்லியனுார் அருகே குடுவையாற்றில் மூழ்கி இரண்டு மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி, திருவண்டா ர்கோவில், இந்திரா நகரை சேர்ந்த கருணாகரன் மகன் விக்னேஷ், 18; கலிதீர்த்தாள்குப்பம், தொட்டி தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் கபிலேஷ், 18; இருவரும் திருவண்டார் கோவில் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து, தேர்ச்சி பெற்று கல்லுாரி சேர்க்கைக் காக காத்திருந்தனர்.

இந்நிலையில், விக்னேஷ், கபிலேஷ் மற்றும் அவர்களது நண்பர்கள் உட்பட 5 பேர் நேற்று மாலை 5:00 மணியளவில் வில்லியனுார் அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் குடுவையாறு தடுப்பணையில் குளித்தனர்.

அங்கு, மண் அரிப்பு ஏற்பட்டிருந்த ஆழமான பகுதியில் குளித்தபோது எதிர்பாராத விதமாக விக்னேஷ் மற்றும் கபிலேஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். அதைக் கண்ட சக நண்பர்கள் கூச்சலிட்டனர்.

அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, ஆற்றில் மூழ்கிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை செய்தும் பலனளிக்காமல் விக்னேஷ், கபிலேஷ் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

தகவலறிந்த வில்லியனுார் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் பெ ரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களின் உடலை மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றன ர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us