ADDED : ஜூன் 05, 2026 04:38 AM
வில்லியனுார்: வில்லியனுாரில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், கொலை செய்ய ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த இரு தரப்பை சேர்ந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார், கோட்டைமேட்டை சேர்ந்தவர் மூர்த்தி மகன் முகேஷ், 21. இவருக்கும், வில்லியனுார் மல்லிகா தியேட்டர் வீதி, சாமியார்தோப்பைச் சேர்ந்த ராஜ் மகன் ஹரிநாத் (எ) கேரளா, 21, என்பவருக்கும் முன் விரோதம் உள்ளது.
முகேஷ், சில வாரங்களுக்கு முன் தனியாக சென்ற ஹரிநாத்தை வழிமறித்து சரமாரியாக தாக்கினார். இது குறித்து ஹரிநாத்தின் நண்பர்களுக்கு தெரியவந்தது. ஆத்திரமடைந்த நண்பர்களான வில்லியனுார் பெருமாள் மகன் வினோத்குமார், 27; சந்திரசேகர் மகன் நுாதேஷ், 23; பார்த்திபன் மகன் கிஷோர், 22; கணேசன் மகன் சிவா, 22, ஆகியோர் முகேஷை கொலை செய்ய திட்டமிட்டு, பயங்கர ஆயுதங்களுடன் காத்திருந்தனர்.
தகவல் அறிந்த வில்லியனுார் போலீசார் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த வினோத்குமார், நுாதேஷ், கிேஷார், சிவா மற்றும் முகேஷ் உள்ளிட்ட இரு தரப்பையும் சேர்ந்த ஐந்து பேரை நேற்று கைது செய்து செய்தனர்.
