நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிக்கு எம்.எல்.ஏ., பாராட்டு
நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிக்கு எம்.எல்.ஏ., பாராட்டு
ADDED : ஜூன் 05, 2026 04:41 AM

பாகூர்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு திரும்பிய மாணவர்களுக்கு, கிருமாம்பாக்கம் அம்பேத்கர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், பள்ளி துணை முதல்வர் கருணாகரன் தலைமை தாங்கினார். தலைமையாசிரியை அனிதாகுமாரி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மோகன்தாஸ் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, 2025-26 கல்வியாண்டில் 10வது மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்காக, பள்ளி துணை முதல்வர், தலைமை ஆசிரியை, ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டினார். தொடர்ந்து, புதிய கல்வியாண்டிற்கான பாடப் புத்தகங்களை மா ணவர்களுக்கு வழங்கினார்.
அப்போது, அவர், பிளஸ் 2 முடித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி வழிகாட்டுதல் மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து, மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி புதிய கல்வியாண்டை உற்சாகமாக துவக்கி வைத்தார்.
மேலும், ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், மாவட்ட மற்றும் மாநில அளவில் இப்பள்ளி சிறப்பிடம் பெற்று, ஐந்து நட்சத்திர குறியீடு பெற்றதற்கான விருதை, மோகன்தாஸ் எம்.எல்.ஏ., பள்ளி துணை முதல்வர் கருணாகரனிடம் வழங்கினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், மாணவர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
