/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் கடலில் மூழ்கி மாணவி பலி காப்பாற்ற முயன்ற 2 மாணவர்கள் மாயம்
/
காரைக்கால் கடலில் மூழ்கி மாணவி பலி காப்பாற்ற முயன்ற 2 மாணவர்கள் மாயம்
காரைக்கால் கடலில் மூழ்கி மாணவி பலி காப்பாற்ற முயன்ற 2 மாணவர்கள் மாயம்
காரைக்கால் கடலில் மூழ்கி மாணவி பலி காப்பாற்ற முயன்ற 2 மாணவர்கள் மாயம்
ADDED : ஜன 31, 2024 07:33 AM

காரைக்கால்: காரைக்கால் கடலில் குளித்த கல்லுாரி மாணவி, ராட்சத அலையில் சிக்கி இறந்தார். அவரை காப்பாற்ற முயன்ற இரு மாணவர்கள் மாயமாகினர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கல்லுாரி இறுதி ஆண்டு மாணவ, மாணவிகள் 14 பேர் நேற்று மதியம் காரைக்காலுக்கு வந்தனர். கடற்கரையில் அமர்ந்து அனைவரும் சாப்பிட்டனர்.
பின்னர், திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மாணவி ஹேமாமாலினி, 20; திப்பிராஜபுரம் ரித்தன்யா,18; ஆகிய இருவரும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டனர்.
அதனைக் கண்டு திடுக்கிட்ட கரையில் இருந்த சக மாணவர்கள் திப்பிராஜபுரம் புகழேந்தி,25; எஸ்.புத்துார் அபிலாஷ், 20; வலையப்பேட்டை ஜெகதிஷ், 20; மைக்கல் 20, ஆகியோர் கடலில் இறங்கி மாணவிகளை மீட்க முயன்றனர். ஆனால், அவர்களும் அலையில் சிக்கி தத்தளித்தனர்.
உடன் அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரித்தன்யா, புகழேந்தி, மைக்கல் ஆகிய மூவரை மீட்டனர். ஹேமாமாலினி இறந்த நிலையில் மீட்கப்பட்டார். அபிலாஷ், ஜெகதீஷ் ஆகிய இருவரும் மாயமாகினர்.
மீட்கப்பட்ட மூவரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த காரைக்கால் போலீசார் விரைந்த வந்து இறந்த மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடலில் மாயமான மாணவர்கள் இருவரை சீனியர் எஸ்.பி., மணீஷ் மற்றும் எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையிலான போலீசார் மீனவர்கள் உதவியுடன் தேடி வருகின்றனர்.