/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் பைக் திருடிய விழுப்புரம் ஆசாமிகள் 2 பேர் கைது
/
புதுச்சேரியில் பைக் திருடிய விழுப்புரம் ஆசாமிகள் 2 பேர் கைது
புதுச்சேரியில் பைக் திருடிய விழுப்புரம் ஆசாமிகள் 2 பேர் கைது
புதுச்சேரியில் பைக் திருடிய விழுப்புரம் ஆசாமிகள் 2 பேர் கைது
ADDED : நவ 25, 2025 05:42 AM

புதுச்சேரி: புதுச்சேரியில், பைக் திருடிய விழுப்புரம் ஆசாமிகள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி, பூமியான்பேட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்,28; புதுச்சேரியில் தனியார் விடுதி மேலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு விடுதி முன்பு தனது பல்சர் பைக்கை நிறுத்தி வைத்திருந்தார். நள்ளிரவு 1:00 மணியளவில், அவரது பைக்கின் பூட்டை உடைத்து, 2 வாலிபர்கள் தள்ளி சென்றனர். இதை பார்த்து விக்னேஷ் கூச்சலிட்டார். அருகில் இருந்த பொதுமக்கள், இருவரையும் கையும், களவுமாக பிடித்து உருளையன்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த அடுக்கம் கிராமத்தை சேர்ந்த மாசிலாமணி மகன் சந்தோஷ், 19; மல்லரசன்குப்பத்தை சேர்ந்த அர்ஜின் மகன் அஜித், 26; என்பதும், புதுச்சேரி வந்த இவர்கள், குடித்துவிட்டு வெளியே வந்தபோது, விடுதி முன் நிறுத்தப்பட்டிருந்த விக்னேஷ் பைக்கை உடைத்து தள்ளிச் சென்றது தெரியவந்தது.
அதையடுத்து, விக்னேஷ் கொடுத்த புகாரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக்கை பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

