ADDED : மார் 25, 2026 11:19 PM
அரியாங்குப்பம்: சாராயம் விற்ற இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
வீராம்பட்டினம் சாலை, புதுக்குளம் அருகில் இரண்டு பெண்கள் திருட்டு தனமாக சாராயம் வாங்கி வந்து பாட்டில்கள் மூலம் விற்பனை செய்வதாக, புதுச்சேரி சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று காலை அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, சாராயம் விற்ற இரண்டு பெண்களை போலீசார் பிடித்து, விசாரித்தனர். அதில், அரியாங்குப்பம் புதுக்குளத்தை சேர்ந்த ஸ்டெல்லா மேரி, 39; செண்பகம்,45; ஆகியோர் என்பது தெரியவந்தது.
சாராயத்தை வாங்கி வந்து, குவாட்டர் பாட்டில்கள் மூலம், கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்து. அவர்களிடமிருந்து 600 ரூபாய் மதிப்ப 50 சாராய பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரு பெண்களை அரியாங்குப்பம் போலீசார், புதுச்சேரி கலால்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
