/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண்டமங்கலம் அருகே 'டைமிங்' தகராறு தனியார் பஸ்கள் மோதி 2 பெண்கள் காயம்

ADDED : டிச 22, 2024 07:49 AM

கண்டமங்கலம் கண்டமங்கலம் அருகே இரண்டு தனியார் பஸ்கள் போட்டி போட்டு சென்று மோதியதில், இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர்.
விழுப்புரத்தில் இருந்து இரண்டு தனியார் பஸ்கள் நேற்று மாலை புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தது. ஆழியூர் எல்லைப் பகுதியில் சென்றபோது டைமிங் தகராறு காரணமாக 2 பஸ் டிரைவர்களும் போட்டி போட்டு முந்திச் செல்ல முயன்றனர்.
அப்போது குறுகிய சாலையில் கடக்க முடியாமல் இரண்டு பஸ்களும் ஒன்றுடன் ஒன்று உரசி, சாலையோர தடுப்புச் கட்டையில் மோதி நின்றன. இதில் பஸ்சில் பயணம் செய்த புதுச்சேரி, தேங்காய்திட்டு செந்தில்குமார் மனைவி சரளா 40; வாணரப்பேட்டை ராஜ்குமார் மனைவி கமலா, 42, ஆகியோர் காயமடைந்தனர்.
தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு, அரியூர் தனியார் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தொடர்ந்து இரண்டு பஸ்களையும் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்து காரணமாக சர்வீஸ் சாலையை கடந்து செல்ல முடியாமல் நீண்டதுாரம் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.