தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியுடன் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் கைது

 கத்தியுடன் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் கைது

 கத்தியுடன் பதுங்கி இருந்த 2 வாலிபர்கள் கைது


ADDED : செப் 04, 2026 09:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 09:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கத்தியுடன் பதுங்கி இருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வி ல்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அரியூர், வெங்டேஸ்வரா நகர், 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு வாலிபர்கள் கத்தியை வைத்து கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கிருந்த வாலிபர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, கத்தியை பறிமுதல் செய்து விசாரித்தனர். அதில், அதே பகுதியைச் சேர்ந்த சுனன், 31; ஏம்பலம், புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தில்லைராஜா, 22, ஆகியோர் என்பதும், அவர்கள் கத்தி வைத்துக் கொண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us