ADDED : செப் 04, 2026 09:10 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கலை கொல்லி மருந்து குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வில்லியனுார் அடுத்த ஊசுடு பகுதியைச் சேர்ந்தவர் மீனாட்சி, 66. இவருக்கு தீராத மூட்டு வலி இருந்து வந்தது.
இதற்காக பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் மூட்டு வலி சரியாகாததால் மனமுடைந்த அவர், கடந்த 29ம் தேதி காலை, கலை கொள்ளி மருந்தை குடித்தார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார்.
புகாரின் பேரில், வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
