ADDED : செப் 04, 2026 09:10 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: சாதிய பாகுபாட்டை வெளிப்படுத்திய உத்தரகண்ட் பா.ஜ., வினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்., கமிட்டி சார்பில், பெரியகடை போலீசில் புகார் அளித்தனர்.
உத்தரகாண்ட் ஹல்த்வானில் காங்., கட்சியின் தேசிய தலைவர் கார்கே பங்கேற்ற கூட்டத்தில், அவர் வெளியேறிய பின்னர் சாதி பாகுபாட்டை வெளிப்படுத்தும் விதகமாக பா.ஜ., வினர் 'சுத்திகரிப்பு சடங்கு' செய்துள்ளனர்.
அவ்வாறு சாதிய பாகுபாடு காட்டிய பா.ஜ.,வினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி வட்டார காங்., தலைவர் ஜெரார்டு, மாநில காங்., பொது செயலாளர் மருது பாண்டியன், வழக்கறிஞர் பிரதீஷ் இருதயராஜ், வார்டு காங்., தலைவர் அலன் ஆகியோர் பெரியகடை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரிடம் புகார் அளித்தனர்.
