ADDED : செப் 01, 2026 10:03 PM
புதுச்சேரி: கத்தியுடன் நின்று மக்களை மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, ரெட்டியார்பாளையம் பகுதியில் வாலிபர்கள் இருவர் கத்தியுடன் நின்று கொண்டு, அவ்வழியாக செல்பவர்களை மிரட்டுவதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது.
அதன்பேரில், போலீசார் ரோந்து சென்றபோது, ஜெ.ஜெ., நகர் அருகே, கத்தியுடன் திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், மூலக்குளத்தை சேர்ந்த அவிந்த், 24; அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த சந்தோஷ், 19, ஆகியோர் என, தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். இதில், அரவிந்த் மீது, ஆயுதம் வைத்திருத்தல், அடிதடி உள்ளிட்ட வழக்குகள் ரெட்டியார்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
