தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்து மெக்கானிக் சாவு

மயங்கி விழுந்து மெக்கானிக் சாவு

மயங்கி விழுந்து மெக்கானிக் சாவு


ADDED : செப் 01, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: டி.வி., மெக்கானிக் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார விசாரித்து வருகின்றனர்.

முத்தியால்பேட்டை, நடேசன் நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 52. இவர் அதே பகுதியில் டி.வி., மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் இருந்தது.  முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் அருகே நேற்று முன்தினம் அவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us