/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போதையில் ரகளை 2 வாலிபர்கள் கைது
/
போதையில் ரகளை 2 வாலிபர்கள் கைது
ADDED : பிப் 11, 2025 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காட்டேரிக்குப்பம் அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை அருகே, குடிபோதையில் இருந்த 2 பேர், அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டனர். சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சென்று, போதையில் தகராறில் ஈடுபட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.அவர்கள், மயிலம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த மகேஷ்ராஜ், 24; வானுார் அங்காளம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த முத்து, 26; என்பது தெரியவந்தது.
இதையடுத்து, இருவர் மீதும், குடிபோதையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, வழக்கு பதிந்து, அவர்களை கைது செய்தனர்.