/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது
/
கத்தியுடன் திரிந்த 2 வாலிபர்கள் கைது
ADDED : டிச 16, 2024 05:49 AM
புதுச்சேரி : கத்தியுடன் குற்ற சம்பவத்தில் ஈடுபட இருந்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சேதாரப்பட்டு-பிள்ளையார்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது பிள்ளையார்குப்பம் சந்திப்பு பகுதியில் நின்று இருந்து 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர்.
அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் கலித்திரம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாரதிதாசன் 22, பிள்ளையார்குப்பம் புதுநகரைச் சேர்ந்த கோவலன் 24, என்பதும் அவர்கள் கத்தியை வைத்துக் கொண்டு குற்றச்சம்பவத்தில் ஈடுபட இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்து இருவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.