/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது
/
கஞ்சா விற்பனை: 2 வாலிபர்கள் கைது
ADDED : ஜன 01, 2026 05:37 AM

புதுச்சேரி: கஞ்சா விற்ற இரு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முதலியார்பேட்டை, போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். வேல்ராம்பட்டு ஏரிக்கரை வீதியில் இரு வாலிபர்கள் கஞ்சா விற்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்றபோது இருவரும் தப்பி ஓட முயன்றன ர்.
அ வர்களை பிடித்து விசாரித்ததில் அரியாங்குப்பம் ஓடைவெளியை சேர்ந்த பிரகாஷ் மகன் கிருஷ்ணா, 24; தேங்காய்திட்டு, புதுநகர் கோபாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன், 22, என்பதும், இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 70 கிராம் கஞ்சா மற்றும் இரு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

