/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மலர் கண்காட்சியில் 22,000 கன்றுகள் விற்பனை
/
மலர் கண்காட்சியில் 22,000 கன்றுகள் விற்பனை
ADDED : பிப் 12, 2025 04:08 AM
புதுச்சேரி : வேளாண் துறை சார்பில் நடந்த மலர் கண்காட்சியை 4.5 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறினர்.
புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாய நலத்துறை சார்பில் தாவரவியல் பூங்காவில், 35வது மலர், காய், கனி கண்காட்சி கடந்த 9 ம் தேதி துவங்கி 3 நாட்கள் நடந்து முடிந்தது. இதில், ஏராளமான காய், கனி மற்றும் மலர் அலங்கார அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தது. பூச்செடிகள் மற்றும் மானிய விலையில் மரக்கன்றுகளும் விற்பனை செய்யப்பட்டது.
வேளாண் துறை தோட்டக்கலை பிரிவு அதிகாரிகள் கூறுகையில், மூன்று நாள் நடந்த கண்காட்சியை 4.50 லட்சம் மக்கள் பார்வையிட்டனர். 10 ஆயிரம் மலர் செடிகள், 12 ஆயிரம் பழமரக்கன்றுகள் விற்பனையாகின. இதில், ரூ. 21 லட்சம் மதிப்பிலான செடிகள் மற்றும் பழமரக்கன்றுகள் விற்பனை செய்யப்பட்டது' என்றனர்.