/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரியில் 226 நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
/
இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரியில் 226 நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரியில் 226 நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரியில் 226 நர்ஸ் பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ADDED : மார் 19, 2025 06:32 AM
புதுச்சேரி: சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
ரமேஷ்(என்.ஆர்.காங்): இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு வெளிப்புற நோயாளிகள் அதிகமாக வருகின்றனர். ஆனால் செவிலியர்கள் பற்றக்குறையாக உள்ளது.
ராமலிங்கம்(பா.ஜ.,): அங்கு செவிலியர் பற்றாக்குறை உள்ளதால் பணிசுமையும் அதிகரித்துள்ளது. விரைவாக செவிலியர்களை அரசு நியமிக்க வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: அரசு மருத்துவக்கல்லுாரியில் கூடுதலாக 226 செவிலியர்களை நிரப்ப கோப்பு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் செவிலியர்கள் நியமிக்கும்போது அனைத்தும் சரியாகும்.
ரமேஷ்: இந்த கோப்பினை பற்றி நானும் விசாரித்தேன். ஆனால் இந்த கோப்பு சுற்றி, சுற்றி தான் வருகிறது. செவிலியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தற்போது அரசு மருத்துவக்கல்லுாரியில் 147 செவிலியர்கள் மட்டும் தான் பணியில் உள்ளனர். அவர்களால் அங்கு வரும் நோயாளிகளை சமாளிக்க முடியவில்லை.
அங்காளன்(சுயேச்சை): என்.எச்.ஆர்.எம்., எனும் தேசிய சுகாதார முகமையில் பணியாற்றும் செவிலியர்களை இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரியில் செவியர்களாக நியமிக்கலாம். கொரோனா காலத்தில் உயிரை பணயம் வைத்து பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு அங்கு வாய்ப்பும், முன்னுரிமையும் கொடுக்க வேண்டும்.
முதல்வர் ரங்கசாமி: தேசிய சுகாதார முகமை செவியலர், ஊழியர்களை அரசு துறைகளில் நியமிக்க மத்திய அரசுக்கு அனுமதி வழங்கவில்லை. அதனால் அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்கப்பட்டது. அவர்களை போலவே நான் - கிளனிக் எனப்படும் மருத்துவம் சாராத முகமை ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.
செவிலியர்களை நியமிக்கும் கோப்பு சுற்றி, சுற்றித்தான் வருகிறது. கல்லுாரி சொசைட்டியின் கீழ் செயல்படுவதால் பொதுக்குழுவில் செவிலியர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளோம்.
பி.ஆர்.சிவா (சுயேச்சை): காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எப்போது கட்டும் திட்டம் உள்ளது.
முதல்வர் ரங்கசாமி: காரைக்காலில் அரசு பொது மருத்துவமனை அவசியம். இதற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். சபாநாயகரும் மத்திய அமைச்சரை சந்தித்து பேச உள்ளார். விரைவில் அனுமதி பெற்று காரைக்கால் திருநள்ளாறில் அரசு மருத்துவக்கல்லுாரியுடன் கூடிய மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.