தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரகளை 23 பேர் அதிரடி கைது

ரகளை 23 பேர் அதிரடி கைது

ரகளை 23 பேர் அதிரடி கைது


ADDED : நவ 29, 2026 09:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2026 09:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் பிப்டிக் தொழிற்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் கம்பெனி பகுதிகளில் குடிபோதையில் ரகளை செய்த கூடப்பாக்கம் மாயகிருஷ்ணன்,48; திண்டிவனம் வீராசாமி,54; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் குண்டுசாலை பகுதியில் ரோந்து சென்றனர். அங்குள்ள சாராயக்கடை பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த மூலக்குளம் அம்ருதீன்,28, என்பவரை கைது செய்தனர்.

ரெட்டியார்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் மூலகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்பகுதியில் உள்ள தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளை செய்த தர்மாபுரி கணபதி,38; திலாஸ்பேட்டை சபிர் ஹூசைன்,32 ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல் மேரி உழவர்கரை பகுதியில் உள்ள தனியார் பார் அருகில் குடிபோதையில் ரகளை செய்த மீனாட்சிப்பேட்டை அன்பரசன்,40; உருளையன்பேட்டை விக்னேஷ்,22; லாஸ்பேட்டை அகிலன்,26, ஆகியோரை கைது செய்தனர்.

முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் பாப்பாமாள் கோவில் தெருவில் ரோந்து சென்றனர். செல்வராஜ் செட்டியார் சந்திப்பில் ரகளை செய்த முத்தியால்பேட்டை செந்தில்,42; பாரதிதாசன் வீதி சுடுகாடு அருகில் நாகரீமாக நடந்து கொண்ட முத்தியால்பேட்டை சித்தானந்தன்,44, ஆகியோரை கைது செய்தனர்.

காலாப்பட்டுபோலீசார் நேற்று முன்தினம் கணபதிசெட்டிக்குளம் பகுதியில் ரோந்து சென்றனர். பிம்ஸ் சாலை சர்ச் அருகே குடிபோதையில் ரகளை செய்த லாஸ்பேட்டை ேஹமச்சந்திரன் என்பவரை கைது செய்தனர்.

ஒதியஞ்சாலை போலீசார் நேற்று முன்தினம் உப்பளம் பகுதியில் ரோந்து சென்றனர். எக்ஸ்போ கிரவுண்டில் குடிபோதையில் ரகளை செய்த, உப்பளம் ரகுபதி,68; முத்தியால்பேட்டை அந்தோணி வினோத்,40; ஆகியோரை கைது செய்தனர்.

அதேபோல், பாண்டிமெரினா பகுதியில் மது போதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை சுரேஷ்,44; விநாயகம்,38; விஜய்,42; ஆகியோரை கைது செய்தனர்.

முதலியார்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் அம்பேத்கர் சாலையில் ரோந்து சென்றனர். ஒத்தவாடை வீதி சந்திப்பில் குடிபோதையில் ரகளை செய்த நைனார்மண்டபம் விஜயகுமார்,43; வில்லியனுார் பைபாசில் ரகளை செய்த நைனார்மண்டபம் வெங்கடேஷ்முருகன்,45, ஆகியோரை கைது செய்தனர்.

வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் கூடப்பாக்கம் மெயின்ரோட்டில் ரோந்து சென்றனர். அங்கு பொது இடத்தில் மது அருந்திய வில்லியனுார் செல்வா,35; பெலவேந்திரன்,62; ஆகியோர் மீதும், மூலக்கடை பகுதியில் பொது இடத்தில் மது குடித்து ரகளை செய்த கணுவாப்பேட்டை சிவக்குமார், யோகேஷ்,26; ஆகியோரை கைது செய்தனர்.

மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் உறுவையாறு பகுதியில் ரோந்து சென்றனர். சண்முகசாமி நகரில் பொது இடத்தில் மது குடித்து ரகளை செய்த, புதுச்சேரி ராமன்,22; கரிக்கலாம்பாக்கம் விஷ்ணுமித்ரா நகரில் பொது இடத்தில் மது குடித்து செல்லஞ்சேரி விஸ்வநாதன், 36, ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us