/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
24 மணிநேர அவசர கால கட்டுப்பாட்டு அறை திறப்பு
/
24 மணிநேர அவசர கால கட்டுப்பாட்டு அறை திறப்பு
ADDED : அக் 15, 2024 06:28 AM
புதுச்சேரி: தேங்காய்திட்டு மீன் வளத் துறை அலுவலகத்தில், மீனவர்களுக்கான அவசர கால கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மீன் வளத் துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
வங்க கடலில் நேற்று(14ம்தேதி) மாலை 5.30 மணியளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அதே பகுதியில் நிலவுகிறது. இது மேற்கு-வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று 15ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தெற்கு வங்ககடலின் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும். இது அதற்கு அடுத்த இரண்டு தினங்களில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி அதனையொட்டி தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை நோக்கி நகர கூடும். இதன் காரணமாக ஒரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே வரும் 17ம் தேதி வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம். வங்க கடலில் தற்போது ஏற்பட்டுள்ள வானிலை காரணமாக தீவிர மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி அரசின் மீன்வளத் துறை தேங்காய்திட்டு அலுவலகத்தில் அவசரகால கட்டுபாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இதனுடைய தொடர்பு எண்:0413-2353042. எனவே மீனவர்கள் அவசர கால உதவிக்கு இந்த எண்ணை அல்லது பேரிடர் மேலாண்மை அலுவலகத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்-1070, 1077, காவல் துறை உதவி எண்-112 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.

