/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது
/
காரைக்கால் மீனவர்கள் 24 பேர் கைது
ADDED : பிப் 17, 2026 05:52 AM
காரைக்கால்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, காரைக்கால் மீனவர்கள், 24 பே ரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம், 54; இளங்கோவன், 54, உட்பட, 14 பேர் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இதேபோல், கீழகாசாகுடியை சேர்ந்த வைத்தியநாதன் விசைப்படகில், அதே பகுதியை சேர்ந்த மோகன், 30; சின்னயன், 48, உட்பட, 10 பேர், 12ம் தேதி கடலுக்கு சென்றனர். இரு குழுவினரும் நேற்று முன்தினம் இரவு, கோடியகரைக்கு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, 24 பேரையும் கைது செய்து, இரு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

