/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு 24,162 பேர் போட்டி தேர்வு எழுதினர்
/
30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு 24,162 பேர் போட்டி தேர்வு எழுதினர்
30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு 24,162 பேர் போட்டி தேர்வு எழுதினர்
30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு 24,162 பேர் போட்டி தேர்வு எழுதினர்
ADDED : செப் 01, 2025 07:12 AM

புதுச்சேரி : முப்பது துணை தாசில்தார் பணியிடங்களுக்கான போட்டி தேர்வினை 24,162 பேர் எழுதினர்.
புதுச்சேரி வருவாய் துறையில் காலியாக உள்ள 30 துணை தாசில்தார் பணியிடங்களுக்கு கடந்த மே மாதம் 28ம் தேதி முதல் ஜூன் 27ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இப்பணிக்கானபோட்டி தேர்வு எழுத 37,349 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான போட்டி தேர்வு இருவேளைகளாக மொத்தம் 101 மையங்களில் நேற்று நடந்தது.
காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை முதல்தாள் தேர்வு, மதியம் 2:30 மணி முதல் மாலை 4:.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடந்தது. மொத்தம் 24,162 பேர் எழுதினர்.புதுச்சேரியில் பாரதிதாசன் மகளிர் கல்லுாரி, காஞ்சிமாமுனிவர், திருவள்ளுவர் அரசு பெண்கள், வள்ளலார் அரசு பெண்கள் பள்ளி உள்பட மொத்தம் 80 மையங்களில் நடந்தது. இதேபோல் காரைக்காலில்-12, மாகே-3, ஏனாம்-6 மையங்களில் இத்தேர்வு நடந்தது.
முன்னதாக தேர்வு மையங்கள் காலை 9:30 மணிக்கு மூடப்பட்டது. அதன் பிறகு தேர்வு மையத்திற்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படவில்லை. மெட்டல் டிடெக்டர்கள் மூலம் தேர்வர்கள் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். ஹால்டிக்கெட், அடையாள சான்று சரிபார்க்கப்பட்டன.
முதல் தாள் தேர்வு 100 மதிப்பெண்ணிற்கு 2:00 மணி நேரம் நடந்தது. பொது அறிவு, தர்க்கம், ஆங்கிலமொழி அறிவு, கம்ப்யூட்டர் அடிப்படையில் இந்த கேள்விகள் அமைந்திருந்தது. பெரும்பாலான மாணவர்கள் முதல் தாள் கேள்விகள் சுலபமாக இருந்ததாக தெரிவித்தனர்.
ஆனால் மதியம் நடந்த இரண்டாம் தாளின் 100 கேள்விகளும் சிந்தித்து பதிலடிக்க கூடியவையாக இருந்தது. இயற்பியல், வேதியியல், கணித கேள்விகள் கடினமாகவே இருந்ததாக தெரிவித்தனர்.
ஆன்சர் கீ வௌியீடு துணை தாசில்தார் தேர்வு புதுச்சேரி மட்டுமின்றி காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களிலும் நடத்தப்பட்டுள்ளது. இந்த பிராந்தியங்களில் இருந்து விடைத்தாள்கள் வந்து சேர வேண்டும். அதன் பிறகே திருத்தும் பணி துவங்கும்.
இந்நிலையில் ஆன்சர் கீ நேற்றிரவு வெளியிடப்பட்டது.
இந்த வாரத்திற்குள் ரிசல்ட்டினை வெளியிட நிர்வாக சீர்த்திருத்த துறை, முடிவு செய்துள்ளது.