/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 256 பேர் கைது பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின
/
மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 256 பேர் கைது பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின
மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 256 பேர் கைது பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின
மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 256 பேர் கைது பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் இயங்கின
ADDED : பிப் 17, 2024 06:26 AM

புதுச்சேரி: மறைமலையடிகள் சாலையில் மறியலில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினர் 56 பெண்கள் உட்பட 256 பேர் கைது செய்யப்பட்டனர். பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடியது.
வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய மாநில அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கிராமப்புறத்தில் கடையடைப்பு, நகர பகுதியில் காலை 10:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை பஸ், ஆட்டோ, டெம்போக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நேற்று காலை ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகில் இருந்து பேரணி புறப்பட்டது.
மறைமலையடிகள் சாலை, பாஸ்போர்ட் அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யூ., செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி. மாநில செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினர். விவசாய சங்க தலைவர் கீதநாதன், ஏ.ஐ.சி.சி.டி.யூ., பொதுசெயலாளர் புருஷோத்தமன், செந்தில், மகேந்திரன், சிவக்குமார், வேதா வேணுகோபால் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட 56 பெண்கள் உட்பட 256 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்து அழைத்து செல்ல போலீசாரிடம் வேன் இல்லாததால், போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு கூடுதல் வாகனம் வரவழைக்கப்பட்டு அழைத்து சென்றனர்.
பஸ், ஆட்டோக்கள், கடைகள் வழக்கம்போல் இயங்கின.